பிக்பாஸ்-3 டிவி நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்தது. இதில் பிரபல இயக்குனர் சேரனும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். அவர் உள்ளே இருக்கும்போது வெளியே சில இயக்குனர்கள் சேரன் உள்ளே படும் கஷ்டங்களை எங்களால் பார்க்க முடியவில்லை என்று வறுத்தப்பட்டனர். சிலர் விமர்சிக்கவும் செய்தனர். இந்நிலையில் சேரன் வெளியே வந்தபிறகு ராஜாவுக்கு செக் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

Advertisment

cheran biggboss

அதில், “என் குழந்தை பிறக்கும்போது, நண்பனிடம் சென்று பணம் வாங்கி வருவதற்குள் குழந்தை பிறந்துவிட்டது. அப்பாவாக உணரும் தருணம் மிகவும் அழகானது. அதை இறைவன் எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் அப்பாவாக வாழவேண்டியா சூழல் ஏற்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் நான் அப்பாவாக எந்த நேரத்திலும் நடிக்கவில்லை. ஒரு அப்பாவாகவே உண்மையாகவும் ,நேர்மையாகவும் இருந்தேன். அப்பா-மகள் பாசத்தை நான் தவறாக காண்பித்தேன் என்றால் இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன். தந்தை மகளுக்கான பாசத்தில் அளவே இல்லை.

Advertisment

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது என்னுடைய நண்பர் வசந்தபாலன் கூறிய விஷயம் வீட்டிற்குள் இருக்கும்போதே எனக்குத் தெரியும். அப்போது நான் கூறும்போது அவர் என்னுடைய நண்பர். என்மேல் உள்ள அக்கறையில் தான் கருத்து தெரிவித்திருப்பார் என்று கூறினேன்.

அக்கறையுள்ளவர் மட்டுமே பக்கத்தில் நிற்பார். அக்கறையுள்ளவர் தான் கேட்பார். மற்றவர்கள் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள். வசந்தபாலனின் அக்கறைக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.