cheran about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்திருந்தார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியிருந்தது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருந்தது.

Advertisment

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

Advertisment

இந்த சீரிஸ் வெளியான சில நாட்கள் கழித்து, ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்பு சீரிஸீன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என சலுகை அறிவித்தது. அடுத்து யூட்யூபில் முதல் எபிசோடை மட்டும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து உலகளவில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் பின்பு 125 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டது. இப்போது 150 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீரிஸை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள, எக்ஸ் பதிவில், “மிக நேர்த்தியான படைப்பு. மனிதனுக்கான பல்வேறு முகங்களை பதிவு செய்திருக்கிறது. தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு. குறிப்பாக அதில் பெண்களின் உணர்வுகளை அவர்கள் சகிக்கமுடியாத வலிகளை கடந்தும் வாழ்க்கையை எதிர்கொண்டு நிற்கிறதன்மையை இயக்குநர், சம்பவத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை பதிவு செய்தது என்னை ஈர்த்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புரட்சியாளர்கள் எப்படி அடக்குமுறைகளால் வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை அழகாக பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள். இந்த வெப் டாக்யூஉருவாகக் காரணம் நக்கீரன் ஆசிரியர்,தைரியமாக காட்டுக்குள் சென்று பதிவு செய்த வீடியோ.இந்தத்தொடர் உருவாக, ஒரு உண்மைக் காலம் தாண்டி இச்சமூகத்திற்கு செல்ல உதவியிருக்கிறது. அவருக்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment