/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/68_36.jpg)
சேரன் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக 'திருமணம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளஅவர் அடுத்ததாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்றுகிச்சா சுதீப்பின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சேரன் கன்னடத்தில் கிச்சாசுதீப்பை வைத்து இயக்குகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்துஎக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட சேரன், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.. 'ஆட்டோகிராப்' போன்ற ஒரு மறக்க முடியாத பரிசை வழங்க காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த 'ஆட்டோகிராஃப்’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற தலைப்பில் கன்னடத்தில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)