தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இவர், சமீபத்தில் தன்னுடைய அம்மா மற்றும் சகோதரியுடன் இணைந்து அழகர்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் வளாகத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்பதிவில், "அம்மாகூட கோவிலுக்குப் போவதில் ஒரு அலாதி சுகம் உண்டு... சிறுவயதில் அம்மாவின் கைபிடித்து அழகர்கோவில் சென்ற நான் இன்று என் கைகளை பற்றிக்கொண்டு அதே இடங்களில் அவர் நடந்தபோது என் மனதில் ஏற்பட்ட சந்தோசம்... எல்லா மகன்களும் இதை அனுபவிக்க வேண்டும்... அருகில் இருப்பவர் எங்க அக்கா" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.