Advertisment

"நிலைமை சீராகும் வரை இவைகளை முற்றிலுமாக நீக்கித்தாருங்கள்" - சேரன் வேண்டுகோள்! 

gdsgdsg

கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாககூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த நிலையில் படப்பிடிப்புகள் தொடங்க மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் அதில் பின்பற்ற வேண்டிய 33 வழிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில் முதல்வருக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் சில கோரிக்கைகள் வைத்து இயக்குனரும், நடிகருமான சேரன் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"திரைத்துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதையும், 70% சிறுபடத்தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு படப்பிடிப்பின் அனுமதிக்கான செலவுகளையும், வரிச்சலுகைகளையும் நிலைமை சீராகும் வரை முற்றிலுமாக நீக்கித்தருமாறு வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.

Advertisment

FEFSI cheran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe