Advertisment

“திரையுலகம் குழம்பிக் கிடக்கிறது...”- சேரன் வேதனை! 

cheran

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில பணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆட்கள் அதிகம் பயன்படும் சினிமா ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதேபோல திரையரங்கமும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திறக்கப்படவில்லை. மேலும், எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பதும் கேள்வி குறியாகவே உள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழ் சினிமாதுறை குறித்து இயக்குனர் சேரன் ட்வீட் செய்துள்ளார். அதில், “சிவாஜி-எம்.ஜி.ஆர். என விசில் அடித்துப் படம் பார்த்து, ரஜினி-கமல் என கட் அவுட் வைத்து, விஜய்- அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்தத் திரையரங்க பிரம்மாண்டம் 5 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.

Advertisment

நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடித் தீர்த்த மக்கள் செல்போனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்துப் பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள். எதிர்கால திரையுலகப் பயணம் எந்தத் திசை எனக் கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது திரையுலகம்.

இதில் மக்களின் கருத்து என்ன. அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா. திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?”என்று மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

cheran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe