1959ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து இன்று எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 வரை தொடர்ந்து 61 ஆண்டுகள் திரைத்துறையில் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பல்வேறு சாதனைகள் படைத்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து நேற்றோடு (ஆகஸ்ட் 12) 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதற்கு திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர், இயக்குனர் சேரன் கமல்ஹாசனுக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து அவருடைய #61YearsOfKamalismCDP என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில்...
"திரை வாழ்வில் 61வருடங்கள் அர்ப்பணிப்பு... தமிழ் மொழி தொடங்கி பெரும்பாலான இந்திய மொழிகளில் நடிப்பில் அனைவருக்கும் சவாலாய் நின்ற கம்பீரம்.. கலைஞனாய் எல்லோர்க்கும் முன்னோடியாய் சிந்தித்த கமல் சார்... பிரமிப்போடு தலைநிமிர்ந்து பார்க்கிறேன் உங்கள் உயரத்தை.." என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)