1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்த வரலாற்று நிகழ்வை 83 என்று இயக்குனர் கபீர் கான் படமாக எடுக்கிறார். இதில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்க, ஸ்ரீகாந்தாக தமிழக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Advertisment

ranveer

வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள், இயக்குனர் கபீர் கான், கபில்தேவ், ஸ்ரீகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தை தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Advertisment

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ரன்வீர் சிங். அப்போது அந்த பதிவில் கமெண்ட் செய்திருந்த தீபிகா சென்னையிலிருந்து திரும்புவதற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணாவில் ஒரு கிலோ மைசூர் பாகு, ஹாட் சிப்ஸில் 2 1/2 கிலோ காரமான சிப்ஸ் வாங்கிட்டு வாங்க, இல்லையென்றால் வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த லிஸ்ட்டானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.