Skip to main content

விக்ரம் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021


 

chennai police has denied permission for vikram movie shooting

மாஸ்டர் படத்தின்  வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்  சேதுபதி, ஃபகத் ஃபாசில்,  அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராமன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள விக்ரம் படக்குழு, சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்க காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. மேலும் விக்ரம் படத்திற்காக 24 மற்றும் 25 தேதிகளில் அரங்குகள் அமைக்கவும், 26 மற்றும் 27 தேதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி கேட்டு இருந்த நிலையில் தற்போது இதற்குச் சென்னை காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

 

இது தொடர்பாகச் சென்னை காவல்துறை விக்ரம் படக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்," கரோனா விதிமுறை நடைமுறையில் உள்ளதால், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்த நிகழ்வும் நடத்த முடியாது " எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்