Published on 29/01/2020 | Edited on 31/01/2020
சென்னையில் ஒரு தனி மனித திரைப்பட இயக்கமாக செயல்படத் தொடங்கியவர் 'தமிழ் ஸ்டுடியோ' அருண். சில ஆண்டுகள் தொடர் செயல்பாட்டில் 'பியூர் சினிமா' என்ற சினிமா புத்தக விற்பனை மையத்தையும் தொடங்கினார். வருடம் முழுவதும் பல திரையிடல்கள், கலந்துரையாடல்கள், பயிற்சி வகுப்புகள் என தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைத்து வருகிறது. இதன் உச்சமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 'சென்னை சுயாதீன திரைப்பட விழா' என்ற பெயரில் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. வேறெங்கும் காணக்கிடைக்காத படங்களின் திரையிடல்கள், கலந்துரையாடல்கள் என சினிமா ரசிகர்களுக்கும் காதலர்களுக்கும் இது ஒரு திருவிழாவாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 8,9 தேதிகளில் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இந்த திரைவிழா நடைபெற இருக்கிறது.
