Chennai High Court stays Rs 1.5 crore fine on Vijay

நடிகர் விஜய் கடந்த 2016- 17 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்த போது அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ. 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2015 ஆண்டு விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைஒப்பிட்டு பார்த்தனர். அதில் விஜய் புலி படத்திற்காக பெறப்பட்ட சம்பளத்தில் 15 கோடியை கணக்கில் காட்டாமல் மறைத்ததை கண்டறிந்தனர்.இதனைத்தொடர்ந்து வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறையினர் ரூ 1.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால் கடந்த 2019 ஆண்டிலேயேஉத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அதனால் காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இவ்வழக்கைவிசாரித்த உயர்நீதிமன்றம், விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமானவரித்துறையினர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு தொடர்பான விசாரணையைசெப்டம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன், இதற்கு வருமான வரித்துறையினர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.