Advertisment

விஷால் நிறுவனத்தில் மோசடி; உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

chennai high court new order vishal film factory financial issue case

விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் கணக்காளர் ரம்யாபணியில் இருந்தபோது ரூ 45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகார் ஒன்றினை காவல்துறையிடம் அளித்தார். இந்த வழக்கில் ரம்யா தான் கைது செய்யப்படக்கூடும் என்று முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்குநேற்று (9.3.2022)விசாரணைக்கு வந்த போது," இதில்மனுதாரர் ரம்யா ரூ. 45 லட்சத்தில் 21 லட்சம் செலுத்தி விட்டதாககூறப்பட்டது. மேலும் அவருக்குஜாமீன் வழங்க விஷால் தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும்தெரிவிக்காத காரணத்தால் நிபந்தனையுடன் கூடியமுன் ஜாமீனைவழங்கி நீதிபதி ஜெகதீஸ்சந்திராஉத்தரவிட்டார். அத்துடன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரம்யா 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும்பிணைத்தொகையைரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

actor vishal chennai high court MADRAS HIGH COURT
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe