Skip to main content

அமலாபால் தொடர்ந்த வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

chennai high court new order actress amala paul case

 

தமிழில் மைனா, வேலையில்லா பட்டதாரி, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான அமலாபால் தெலுங்கு மற்றும் மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற இருந்த 'டேஸ்லிங் தமிழச்சி' நிகழ்ச்சியில் பங்கேற்க  இருந்தார். இதற்காக சென்னை தி நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வந்த மான்ஜான்ஸ் என்ற நடன பயிற்சி அகாடமியில் சேர்ந்து  பயிற்சி பெற்று வந்தார்.  

 

அப்போது அழகேசன் என்பவர் அமலாபால் மலேசியா செல்லும் போது இப்ராஹிம் என்பவருடன் இரவு நேர விருந்து சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அமலாபால் இது குறித்து சென்னை தி. நகரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஸ்ரீதர், அழகேசன், இப்ராஹிம், பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 

 

இதனிடையே தொழிலதிபர்கள் ஸ்ரீதர், பாஸ்கரன் ஆகிய  இருவரும் இந்த வழக்கில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, தேவையில்லாமல் போலீஸ்கரர்கள் எங்களையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். 

 

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி இரு தொழிலதிபர்களின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்