Skip to main content

விஜய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

chennai high court new judgment case actor vijay

 

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதம் ஆனதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் வெளிநாட்டு சொகுசு கார் தொடர்பான   வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.

 

கடந்த  2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட bmw x5 காருக்கு நுழைவு வரி செலுத்த நடிகர் விஜய்க்கு தமிழக அரசின் வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நுழைவு வரி வசூலிக்க மாநில அதிகாரங்கள் இல்லை என்ற உத்தரவு பிறப்பித்து இருந்தது. காருக்கு 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்திற்கு 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. 2 சதவிகிதம்  வரி விதிப்பதற்குப் பதிலாக 400 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறையின் வரிவிதிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து உள்ளார். 

 

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று(11.7.2022) தீர்ப்பளித்திருக்கிறது. அதில் நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டுதான் சொகுசு காரை இறக்குமதி செய்திருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டுதான் மாநில அரசுக்கு நுழைவு வரி வசூலிக்க அதிகாரம் உள்ளதாக  தீர்ப்பளித்திருந்தது. எனவே  2019 ஆண்டுக்கு முன்பு முழு வரியும் செலுத்தியிருந்தால் விஜய்க்கு அபராதம் விதிக்கக்கூடாது. 2019 ஆண்டுக்கு பிறகு நுழைவு வரி செலுத்தவில்லை என்றால் அதற்கான அபராதத்தை மட்டும் தமிழக அரசு வசூலிக்கலாம் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்