Skip to main content

'கள்ளன்' படத்திற்கு எதிராக வழக்கு... உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Published on 19/02/2022 | Edited on 19/02/2022

 

chennai high court has given new verdict kallan movie tittile controversy case

 

இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தை  பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அமீர், ராம் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கள்ளன் படத்தில் கதாநாயகியாக நிகிதா நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட பணியில் கவனம் செலுத்தி வரும் படக்குழு விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. 

 

இதனிடையே படத்தின் தலைப்பு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படத்தின் தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு ஊர்களிலிருந்து வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  'கள்ளன்' படத்திற்கு சென்சார் கொடுக்கக் கூடாது எனக் கோரி புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். 

 

இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் 'கள்ளன்' படத்தைப் பார்த்த சென்சார் போர்டு,படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பை வைத்து யு/ஏ சான்றிதழ் கொடுக்க பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்