இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாககூறி கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஃகோ, அஹி,இன்ரிகோ, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்டஇசை நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதனைஎதிர்த்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளையராஜாவின் பாடல்களைபயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, "தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசை நிறுவனங்களுக்குசாதகமாக உத்தரவை பிறப்பிக்க முடியாது. பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது என்றும், இசை பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் கிடையாது என்றும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.இதைகேட்ட நீதிபதி துரைசாமி தலைமையிலானஅமர்வுஎஃகோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங், இன்ரிகோஆகிய நிறுவனங்கள் பதிலளிக்கஉத்தரவிட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.