Advertisment

சிம்புவின் மான நஷ்டஈடு வழக்கு; அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

chennai high court fines simbu and producer michael rayappan case

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1.51 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6.48 கோடி ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisment

இதனிடையே இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் சங்கம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, "இந்த வழக்கில் 1080 நாட்கள் ஆகியும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்பிக்காத காரணத்தால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையை மார்ச் 31 ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் கட்டவேண்டும் எனவும்உத்தரவிட்டுள்ளது.

actor simbu silambarasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe