/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishal_67.jpg)
இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் 'ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்',சக்ரா வெளியீட்டிற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து அந்நிறுவனம்அளித்த புகார் மனுவில், 'தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்த கதையை இயக்குநர் ஆனந்தன், விஷாலை வைத்துப் படமாக்கியுள்ளார். இது காப்புரிமைச் சட்டத்திற்கு விரோதமானது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதற்குப் பதிலளிக்கக்கோரி இயக்குநர் ஆனந்தன் மற்றும் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், 'சக்ரா' படத்தை வெளியிடத் தடைவிதித்து உத்தரவிட்டது. இதனால், படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)