Advertisment

நிரந்தரமாக மூடப்போகும் பிரபல திரையரங்கம்!

avm

சென்னையிலுள்ள பிரபலமான திரையரங்குகளில் ஒன்று வடபழனியில் இருக்கும் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம். மிகவும் பழமையான இந்தத் திரையரங்கில் போதிய கூட்டம் இல்லாததால் திரையரங்கை முற்றிலுமாக மூட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த திரை நிறுவனங்களுள் ஒன்றான ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம்தான் இந்தத் திரையரங்கை 1970களில் தொடங்கியது. தொடக்க காலத்திலிருந்து பாமர மக்களைதன்னுடைய ஆடியன்ஸாக வைத்திருந்த திரையரங்கம் தற்போதுவரை பாமர மக்களுக்கான திரையரங்காகவே இருக்கிறது. இங்கு தனி திரையரங்கிற்கு அரசாங்கம் நிர்ணயம் செய்த டிக்கெட் விலை மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

Advertisment

சமீப காலங்களாக இந்தத் திரையரங்கிற்கு கூட்டமே வருவதில்லை, தினசரி 20 முதல் 30 பேர் மட்டுமே படம் பார்க்க வருகிறார்க்ள். முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாள், திரையரங்கில் நல்ல கூட்டம் இருக்கும். ஆனால், அடுத்த நாளே கூட்டம் குறைந்துவிடும். இது கரோனா பாதிப்பால மூடப்படவில்லை, அதற்கு முன்பு மார்ச் மாதம் மூடுவதாக நிறுவனம் உறுதி செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஏ.வி.எம். நிறுவனம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vadapalani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe