'செல்லம்மா' வீடியோ சாங்கை வெளியிட்ட படக்குழு!

Chellamma

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘டாக்டர்’ திரைப்படம், கடந்த 9ஆம் தேதி வெளியானது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வசூல் ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா...’பாடலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல், இதுவரை யூடியூப் தளத்தில் 13 கோடி பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘செல்லம்மா...’ பாடலின் காணொளி வடிவத்தைப் படக்குழு இன்று (22.10.2021) வெளியிட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘செல்லம்மா...’ வீடியோ சாங், வெளியான ஒருமணி நேரத்திலேயே 3 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe