/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_370.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். திட்டமிட்டிருந்தபடி வெளியாக வேண்டிய இப்படம், சட்டமன்றத் தேர்தல் மற்றும் கரோனா இரண்டாம் அலை காரணமாக இரண்டு முறை தள்ளிப்போனது.
தற்போது இயல்புநிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, வரும் அக்டோபர் 9ஆம் தேதி ‘டாக்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா..’ என்ற பாடலின் காணொளியை 90 விநாடிகள் அளவு கொண்ட க்ளிம்ஸ் வடிவில் படக்குழு இன்று (05.10.2021) வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ‘செல்லம்மா...’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து தற்போதுவரை யூட்யூப் தளத்தில் 12 கோடி பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், க்ளிம்ஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘வலிமை’ படத்தின் சிறிய க்ளிம்ஸை சமீபத்தில் ‘வலிமை’ படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், அதே பாணியில் ‘செல்லம்மா’ பாடலுக்கான க்ளிம்ஸை ‘டாக்டர்’ படக்குழு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)