இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லம்மா' என்ற பாடலை, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் வெளியான இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. யூ-டியூப் தளத்தில் இதுவரை 74 மில்லியன் பார்வையாளர்களால் இப்பாடல் கேட்டு ரசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்பாடல் 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற பாடல் என்ற சாதனையையும் தற்போது படைத்துள்ளது. இத்தகவலை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. ப்ரொடக்சன்ஸ் தன்னுடைய அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.