செக்க சிவந்த வானம் படத்திற்கு தேங்காய் உடைத்தார் மணிரத்னம்

mani

மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் 'செக்க சிவந்த வானம்'. இதில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என இந்த 4 சகோதரர்களுக்கு இடையே நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி, இரண்டு மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. பின்னர் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிந்து வருகிற ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். .ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

maniratnam arrahman simbu str vijaysethupathi aravindswami
இதையும் படியுங்கள்
Subscribe