சீரியலில் களமிறங்கிய தனுஷ் பட நடிகை !

Chaya Singh act tv serial

கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'திருட திருடி'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சாயா சிங் தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து பிற மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்த சாயாசிங் அருள்நிதி நடிப்பில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்சன்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சாய சிங் அடுத்ததாக 'நம்ம மதுரை சிஸ்டர்' என்ற சின்னத்திரை தொடரில்களமிறங்கியுள்ளார். மதுரையை கதைக்களமாக வைத்து இளம் வயதிலேயே தங்களதுபெற்றோர்களை இழந்த நான்கு சகோதரிகளின்வாழ்க்கையில் ஏற்படும்பிரச்சனைகள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chaya Singh
இதையும் படியுங்கள்
Subscribe