Skip to main content

கரோனாவுக்கு வாழ்த்துச் சொல்லி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பிரபல நடிகை...

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

corona virus

 

 

அந்த வகையில் இந்தியாவில் ஏற்கனவே மூவருக்கு இந்த வைரஸ் வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமானது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கான வந்த ஒருவருக்கும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கரோனா வைரஸை வரவேற்று வாழ்த்து தெரிவித்து பிரபல நடிகையான சார்மி வீடியோ பதிவிட்ட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் முன்னணி நடன கலைஞராகவும், சில படங்களில் முக்கியமான ரோலிலும் நடித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வாழ்த்துகள் நண்பர்களே. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கரோனா வைரஸ் டெல்லிக்கும், தெலங்கானாவுக்கு வந்துவிட்டதாம். இதை நான் செய்திகளின் மூலம் தெரிந்துகொண்டேன். கரோனா வைரஸ் வந்துவிட்டது'' என்று கூறியுள்ளார். 

இந்த வீடியோவை பார்த்து கடுப்பான பலரும் சமூக வலைதளங்களில் சார்மியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்த வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார். அதில், “உங்கள் அனைவரின் பின்னூட்டங்களைப் படித்தேன். அந்த வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தில் செய்யப்பட்ட முதிர்ச்சியற்ற செயல் அது. இனிமேல் என் செயல்களின் கவனமாக இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்