charlie dq

Advertisment

கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான படம் 'சார்லி'. இந்தப் படத்தில் துல்கருடன் பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் செம ஹிட்டான சார்லி படம், தமிழர்கள் மத்தியிலும் மிகப் பிரபலம்.

இந்நிலையில் இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யத்திட்டமிட்டிருந்தனர். பிரமோத் பிலிம்ஸ் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி, தமிழில் தயாரித்தது. மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் வெளியான தகவலைப் படக்குழு மறுத்துள்ளது. 'மாறா' என்ற டைட்டிலில் உருவாகும் சார்லி தமிழ் ரீமேக் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது. இறுதிக்கட்ட பணிகளும், இசை மட்டுமே மீதம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கவிஞர் தாமரை பாடல்களை எழுத உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கிய திலீப் குமார்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.