Skip to main content

15 வயதிலேயே எனது தாயால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டேன் - பிரபல நடிகை பகீர் தகவல்...

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

சார்லீஸ் ஏஞ்சல்ஸ் என்ற படத்தில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை டெமி மூர். இவர் ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1970 மற்றும் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 
 

demi more

 

 

தற்போது இவர் இன்சைட் அவுட் என்று தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு வயது 56. அந்த புத்தகத்தில் அவர் வாழ்வில் நடந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

“எனக்கு 15 வயது இருக்கும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் வயதான ஒருவர் கையில் வீட்டினுடைய சாவியை வைத்துக்கொண்டு எனக்காக காத்து கொண்டு இருந்தார். அந்த வயதானவரை பார்த்த நான், யார் நீங்கள்? எதற்காக என் வீட்டு வாசலில் அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். 

அதற்கு அந்த பெரியவர் உன்னை உனது தாயார் என்னிடம் 500 டாலருக்கு விற்பனை செய்திருக்கிறார் என்று கூறினார். இதனை கேட்ட 15 வயது சிறுமியான நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதற்குபின் அந்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்டேன். அந்த சம்பவத்தை அடுத்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் அழுத்தத்துக்கு உள்ளானேன்” என்று அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது எழுதியிருக்கும் இன்சைட் அவுட் புத்தகத்தை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் தன்னுடைய அம்மாக்காகவும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.