பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் அஜித் நடிப்பில் உருவாகியுள்ளது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் அஜித்திற்கென்றே சில மாற்றங்கள் செய்துள்ளனர். அவை வருமாறு...

Advertisment

ajith

* படத்தின் ஆரம்பக்காட்சி ஒரு ஈ.டி.எம் பாடலுடன் ஆரம்பமாகிறது.

* ஹிந்தி படத்தில் அமிதாப்பச்சனின் குடும்பம் அதிகம் விவரிக்கப்பட்டிருக்காது. ஆனால் இதில் அஜித்திற்கு மனைவி இருக்கிறார். அந்த மனைவியாக நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்.

* இவர்களுக்கென்று அகலாதே என்ற தனி பாடல் ஒன்று படத்தில் இடம்பெறுகிறது.

* ஹிந்தி படத்தில் இல்லாத சண்டை காட்சி இப்படத்தில் இடம்பெறுகிறது. அஜித்திற்கென்று மாஸான பைட் சீக்குவென்ஸாக இது அமைந்துள்ளது. மேலும் சில ஸ்டாண்ட் காட்சிகளும் இதில் இடம்பெறுகிறது.