/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/338_11.jpg)
உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக நடைபெற்று வரும் 'கிராமி விருது', இசையுலகில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த விருது விழா, இந்த ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது.
இந்த விழாவில் ‘சிறந்த தற்கால இசை ஆல்பம்’ என்ற பிரி​வில் திரிவேணி’ என்ற இசை ஆல்பத்​துக்காக பாடகி சந்திரிகா டாண்டனுக்கு கொடுக்கப்பட்டது. இவர் அமெரிக்​காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஆவார். சென்னை​யில் பிறந்த சந்திரிகா டாண்​டன், பெப்​சிகோ நிறு​வனத்​தின் ​முன்​னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்​திரா நூயி​யின் மூத்​த சகோதரி ஆவார்​.
இவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களை வாழ்த்துக்களை சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow Us