raghava lawrence

Advertisment

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. சிவாஜி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த இந்தப் படம் வசூல் சாதனை புரிந்தது.

அண்மையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ரஜினியின் அனுமதியுடன் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன்பின் இந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடிக்கிறார், சிம்ரன் நடிக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் வெளியாகின. அண்மையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்கின்றார் என்று செய்திகள் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார், அதில், “சந்திரமுகி 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா அவர்கள் சிம்ரன் அவர்கள், மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம் அது பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.