பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது 'சந்திரமுகி 2' படம். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் இக்கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திலும் அது தொடருமா என்பது ரசிகர்களின்ஆவலாக உள்ளது. போஸ்டரைப் பார்க்கையில் அந்தக் கதாபாத்திரத்திற்கான வில்லத்தனமான லுக்கில் ராகவா லாரன்ஸ் தோன்றுகிறார். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.