Chandramukhi 2 update vadivelu photo viral on internet

Advertisment

17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 'சந்திரமுகி 2' புது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்து அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வடிவேலு மற்றும் லாரன்ஸ் இருக்கும்புகைப்படம் ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்" என கிண்டலாக குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு நடித்து காண்பித்த காட்சியை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அது ரசிகர்களால் பகிரப்பட்ட நிலையில் தற்போது படக்குழு பகிர்ந்துள்ள புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment