Chandramukhi 2  Swagathaanjali Lyric video released

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது 'சந்திரமுகி 2' படம். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தில் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள நிலையில், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இருவரின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'ஸ்வாகதாஞ்சலி...' லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் 'ரா...ரா...' பாடலை போன்று இப்பாடலையும் உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.