Advertisment

ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற ராகவா லாரன்ஸ்

Chandramukhi 2 shooting started today -  Raghava Lawrence get blessing with rajinikanth

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. அதன் பின்பு 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' தற்போது பிரமாண்டமாக உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் ஆரம்பித்துள்ளது. இதனிடையே ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவரது குருவான ரஜினிகாந்திடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து, இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Advertisment

actor raghava lawrence Actor Rajinikanth p.vasu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe