பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இப்படம் தள்ளி போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படக்குழு அதை உறுதி செய்துள்ளது. அவர்கள் கூறுகையில், "தொழில்நுட்ப கோளாறு காரணமாக வருகிற 28ஆம் தேதிக்கு இப்படம் தள்ளிவைக்கப்படுகிறது. கூடுதல் சிறப்பு விருந்துடன் திரையரங்குகளில் சந்திப்போம்" என குறிப்பிட்டுள்ளது.
ரிலீசுக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் திடீரென தாமதமாக ரிலீஸாவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தைஅளித்துள்ளது. இருப்பினும் படத்தை வரவேற்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இப்படம் வெளியாகவிருந்த அதே 15ஆம் தேதி விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.