Advertisment

'ராரா சரசக்கு ராரா...' - வெளியானது சந்திரமுகியின் லுக்

Chandramukhi 2 Kangana Ranaut first look

Advertisment

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது 'சந்திரமுகி 2' படம். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தில் அக்கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திலும் அது தொடருமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் டைட்டில் ரோலான சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளதாகக் கூறி அக்கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநில விருது, அந்தாண்டிற்கான கலைமாமணி விருது ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டது.

Advertisment

அதனால் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள கங்கனா, ரசிகர்களைக் கவருவாரா என்பது படம் வெளியான பிறகேதெரியும். கங்கனாவின் போஸ்டரைப் பார்க்கையில் அந்த பரதநாட்டிய கலைஞருக்கான நளினத்துடன் நிற்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Kangana Ranaut p.vasu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe