/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/204_18.jpg)
சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா, இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 'கங்குவா' படத்தை முடித்துவிட்டு சுதாகொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதை முடித்துவிட்டு வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பாலிவுட் இயக்குநர் ஓம்பிரகாஷ் மவுரியா இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கு இயக்குநர்கள் போயப்பட்டி சீனு, சந்த மொண்டேடி இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் சந்த மொண்டேடி, கடந்த ஏப்ரல் மாதம் சூர்யா தன்னை பாராட்டியதாக தெரிவித்து, அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் சூர்யாவுடன் படம் பண்ணுவது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சூர்யா சாருடன் பேசுவது எப்போதுமே அருமையாக இருக்கும். ஏனென்றால் அவர் மிகவும் ஊக்கமளிப்பவராகவும், நட்பாகவும் இருப்பர். 'கார்த்திகேயா 2' படத்தைப் பற்றி சூர்யா பேசும்போது நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் என்னை மிகவும் வளப்படுத்தியது.
ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வணவேதம் ஆகிய நான்கு வேதங்களை மையமாக வைத்து சூர்யாவுடன் நான் ஒரு படம் பண்ண திட்டமிட்டுளேன். இப்படம் சோசியோ ஃபேண்டஸி ஜானரில் இருக்கும். நாங்கள் இரண்டு பேரும் இப்படத்திற்காக ஆவலுடன் இருக்கிறோம். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவர் பிஸியாக உள்ளார். இருப்பினும் ஸ்க்ரிப்ட் பணிகள் குறித்து என்னை அழைத்து கேட்பார். அது ஆச்சரியமாக இருக்கும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)