chandini

Advertisment

Advertisment

ராஜா ரங்குஸ்கி படத்திற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த நடிகை சாந்தினி தற்போது மீண்டும் நாயகியாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் பாலாஜி சக்திவேல் இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட, உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ராதா மோகன் இயக்கவுள்ள இப்படத்தில் விரைவில் இணையவுள்ளார் நடிகை சாந்தினி.