/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Santhini.jpg)
பொம்மை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ராதாமோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகைகள் சாந்தினி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட சாந்தினி பேசியதாவது, “இந்தப் படத்தில் பணியாற்றியது பெருமையான விஷயம். ராதாமோகன் சாருடைய அலுவலகத்திலிருந்து கால் வந்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. என்னிடமிருந்து எதார்த்தமான ஒரு நடிப்பை ராதாமோகன் சார் வாங்கியுள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா சாரின் பெரிய ரசிகை நான். அனைவரையும் மதிக்கக்கூடிய மனிதர் அவர். இளம் நடிகர்களை அவர் எப்போதும் ஊக்குவிப்பார். நடிப்புதான் அவருக்கு எல்லாமே. எண்ணம் போல் வாழ்க்கை என்று அவர் சொல்வார். அவருடைய எண்ணம் போல் அவருடைய வாழ்க்கை இருக்க வேண்டும். யுவன் சாருடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)