வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை பர்மா, ஜாக்சன் துறை ஆகிய படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சாந்தினி தமிழரசன் பேசியபோது....
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
"வஞ்சகர் உலகம்' படத்தை தொடர்ந்து மீண்டும் இன்னொரு மர்டர் மிஸ்டரி படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்திம் கதையை கூட கேட்க எனக்கு வாய்ப்பில்லை, உடனே ஓகே சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் படத்தில் நடித்து முடித்தபோது தான் கதாபாத்திரம் பற்றி உணர்ந்தேன். சிரிஷ் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரே டேக்கில் நடிக்கும் நடிகர். ஆனாலும் ஒரு ஷாட்டுக்கு மட்டும் 19 டேக் வாங்கினார். அது என்ன காட்சி என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். யுவன் ஷங்கர் ராஜா என் முதல் படத்தில் ஒரு பாடகராக, எனக்கு ஒரு ஹிட் பாடல் கொடுத்தார், இப்போது இந்த படத்திலும் இசையமைப்பாளராக எனக்கு ஒரு சூப்பர் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார்" என்றார்.