gdsga

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படம் 'சக்ரா'. இயக்குனர் எழிலின் உதவி இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் கரோனா தொற்று காரணாமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

Advertisment

ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வரும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 'சக்ரா' படத்தின் டீஸர் தற்போது வேகமாகத் தயாராகி வருகிரது. இது விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.