Skip to main content

விஷால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

vdgd

 

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் 'சக்ரா'. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு முழுவதுமாக முடிக்கப்பட்டு, தற்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

gdsgsd

 

இப்படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இதனால் படமும் இந்த நான்கு மொழிகளில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும் முதல் விஷால் படம் இதுவாகும். இந்தப் படம் முதலில் ஓடிடி வெளியீடாக இருந்த நிலையில், வரும் பிப்ரவரி 12-ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி 'சக்ரா' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்