Advertisment

பாலிவுட்டில் கால் பதிக்கும் விஷால்!

vszvzs

முதல் முறையாக நடிகர் விஷால் நடிப்பில் இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியாகிறது “சக்ரா” திரைப்படம். நடிகர் விஷாலின் படங்கள், வழக்கமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும். இம்முறை முதல்முறையாக “சக்ரா” திரைப்படம் இந்தி மொழியிலும் “சக்ரா கா ரக்சக்” எனும் பெயரில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான “சக்ரா” படத்தின் ஹிந்தி ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்று, வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகர் விஷால் கூறும்போது....

Advertisment

"தியேட்டர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ், ஆந்திரா, தெலுங்கானா மக்கள் திரைப்படங்கள் மீது கொண்டிருக்கும் காதலும் அவர்கள் தந்துவரும் ஆதரவு மிகப்பெரியது. கடின உழைப்பில், பெரும் பொருட்செலவில் “சக்ரா” திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். சைபர் க்ரைம் உலகினை மையமாக வைத்து உருவாகியுள்ள “சக்ரா” படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள். இந்தி விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது பெரும் நம்பிக்கையை தந்துள்ளது. தற்போது சக்ரா படத்தினை இந்தி மொழியில் “சக்ரா கா ரக்சக்” என வெளியிடுகிறோம். இந்தி மொழி ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.

Advertisment

சைபர் க்ரைம் உலகை மையப்படுத்தி, திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “சக்ரா” படத்தினை விஷாலின் விஷால் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், ஷ்ரதா ஶ்ரீநாத், ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சிருஷ்டி டாங்கே, மனோபாலா ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

chakra actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe