தமிழில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் சுவாமிநாதன் என்கிற சாம்ஸ். முதலில் கதல் மன்னன், கிங் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சச்சின் படம் மூலம் அறிமுகமாகி பின்பு ஆறு, கருப்புசாமி குத்தகைதாரர், ‘அறை எண் 305-ல் கடவுள்’, சிலம்பாட்டம் என ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக விமல் நடிப்பில் வெளியான ‘தேசிங்குராஜா 2’ படத்தில் நடித்திருந்தார். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தில் ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் இவருக்கு ஒரு அடையாளமாக மாறியது. சில காட்சிகளிலே வந்தாலும் குறுகிய காலத்தில் இவர் அடையும் வளர்ச்சி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அந்த காட்சிகள் இன்றளவும் மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. 

Advertisment

இந்த நிலையில் தன்னுடைய பெயரை ‘ஜாவா சுந்தரேசன்’ என சாம்ஸ் மாற்றிக் கொண்டார். இது தொடர்பாக அந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய  ‘அறை எண் 305-ல் கடவுள்’ பட இயக்குநர் சிம்பு தேவனை நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். ஆனால் இந்த பெயரில் இருந்து தனித்து அடையாளம் காண வேண்டும் என்பதற்காக முதலில் சாம்ஸ் என மாற்றினேன். இந்த பெயரில் தால் கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் மக்களிடம் பிரபலமானது. என்னை பார்ப்பவர்கள் சாம்ஸ் என்று அழைப்பதை விட ஜாவா சுந்தரேசன் என்று தான் அழைத்தார்கள். அதனால் ஒரு பெரிய யோசனைக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த சிம்பு தேவனை சந்தித்து முறைப்படி அனுமதி வாங்கிக்கொண்டு இன்று முதல் என்னுடைய பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக் கொண்டிருக்கிறேன். 

Advertisment

85

இதற்காக சிம்பு தேவன், பட தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். அதே போல் எனக்கு இதுவரை வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும். அதே போல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஸ்பெஷல் நன்றி” என்றார்.