Published on 24/03/2019 | Edited on 24/03/2019
ஆரன்ய காண்டம் படத்தை அடுத்து எட்டு வருடங்கள் கழித்து தியாகராஜன் குமாரராஜாவுக்கு வெளியாக இருக்கும் படம்தான் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்திரி, மிஷ்கின் என்று பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் சமீபத்தில்தான் வெளியாகி செம வைரலானது. அதில் விஜய் சேதுபதி பேசும் வசனம் பலரை சமூக வலைதளத்தில் கலந்துரையாட செய்தது. இந்த படம் வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், சூப்பர் டீலக்ஸ் படம் கிளின் ஏ சான்றிதழ் பெற்றியிருப்பதாகவும், 2 மணி நேரம் 56 நிமிடங்கள் படத்தின் நீளம் என்றும், எந்த கட்டும் தணிக்கை குழு செய்யவில்லை என்று அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.