ceo passed away in ramoji film city

Advertisment

உலகளவில் 20 இடங்களில் 2000 ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் நிறுவனம் விஸ்டெக்ஸ். இந்த நிறுவனம் 25 ஆண்டுகளைக்கடந்த நிலையில் அதை பிரம்மாண்டமாகக் கொண்டாட, ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஒரு விழா ஏற்பாடு செய்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 700 ஊழியர்கள் கலந்து கொள்ள கோலாகலமாக விழா ஆரம்பித்தது. இதில் கலந்து கொள்வதற்காக அமரிக்காவை சேர்ந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சஞ்சய் ஷா வருகை தந்திருந்தார்.

அப்போது தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் ஷா மற்றும் நிறுவனத்தின் தலைவர் ராஜு தட்லா ஆகியோருக்கு சிறப்பு வரவேற்பாக 15அடிக்கும் அதிகமான உயரத்திலிருந்து கூண்டில் அமர்ந்து, மேடைக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கூண்டின் ஒரு பக்க செயின் அறுந்து விபத்துகுள்ளானது. கூண்டில் இருந்த சஞ்சய் ஷா மற்றும் ராஜு தட்லா ஆகியோர் உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். அவர்களை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சஞ்சய் ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜு தட்லா ஆபத்தான முறையில் இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராமோஜி ஃபிலிம் சிட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை நடந்து வருகிறது.

Advertisment