central minister l murugan in cannes film festival 2023

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 76வது கேன்ஸ் திரைப்பட விழா நாளை இன்று (17.05.2023) தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்படவுள்ளன.

Advertisment

இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் (Midnight Screenings section) பிரிவிலும் ராகுல் ராய் நடித்த 'ஆக்ரா' படம் ஃபோர்ட்நைட் (Fortnight section) பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990 ஆம் ஆண்டு வெளியான 'இஷானோ' படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் (prestigious Cannes Classic section) பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.

Advertisment

இந்த விழாவின்சிவப்பு கம்பளம் வரவேற்பில் இந்திய பிரபலங்களானநடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்தியாவின் பிரதிநிதியாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கலந்து கொள்கிறார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் சிவப்பு கம்பளவரவேற்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார். அவருடன் ஆஸ்கர் வென்ற தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் கலந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் ஜி20 இந்தியா சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்" என குறிப்பிட்டுள்ளார்.