Central government recognition Manju Warrior honest tax payer

Advertisment

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர்தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரை மத்திய அரசு பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆண்டுதோறும் நேர்மையாக வரி செலுத்துபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழைவழங்கி வருகிறது. அந்த வகையில் 2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரியைமுறையாக காட்டியதால் நடிகை மஞ்சு வாரியாருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.