மத்திய அரசு ஆபாசம் உள்ளடக்கிய ஓடிடி தளங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உல்லு ஆல்ட், நவரசா உள்ளிட்ட நிறைய செயலிகள் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் மொத்தம் 25 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆபாச செயலிகளை தடை செய்ய அனைத்து இணைய சேவை வழங்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆபாச உள்ளடக்கத்தை காண்பித்தல் மற்றும் விளம்பரப்படுத்துதலுக்காக உல்லு, ஆல்ட், நவரசா, பிக் ஷாட்ஸ் ஆப், டெசி ஃப்ளிக்ஸ், பூமெக்ஸ், குலாப் ஆப், மூட் எக்ஸ், ஹல்ச்சுல் ஆப், ஃபுகி, மோஜ்ஃப்ளிக்ஸ், ட்ரிஃப்லிக்ஸ் உள்ளிட்ட மொத்தம் 25 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.