/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DT5z1MWWkAAhYjT.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத 'விஜய் 62' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, பின்னர் கொல்கத்தாவிலும் நடத்தப்பட்டது. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் அங்கு படமாக்கப்பட்ட காட்சியில், விஜய் ரவுடிகளை அடிக்கும் படியான படத்தின் முக்கியமான சண்டைக்காட்சிகள் திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க படப்பிடிப்பு நிகழும் இடத்துக்குள் படக்குழுவினர் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று படக்குழு சார்பாக அறிவுறுத்தியாக தகவல் வெளியாகி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)